துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயர்ந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் நில நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பலர் தங்களுடைய சொந்தங்களை இழந்து தவித்து வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய உரிமையாளர்களை ஒரு நாய் மற்றும் பூனை நிலநடுக்கத்தால் இழந்துள்ளது.

இதனால் ஆதரவின்றி இருந்த அந்த பூனை ஒரு நாயை கட்டி தழுவிக் கொண்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் வாய் பேச தெரியாத ஜீவனே சொந்தங்களை இழந்து ஒருவருக்கொருவர் இப்படி கட்டித்தழுவி ஆறுதல் தேடும்போது எத்தனை மனித உயிர்கள் தங்களுடைய சொந்தங்களை இழந்து இப்படித் தவிப்பார்கள் என்று பலரது எண்ணத்திலும் தோன்ற பார்ப்பவர்களின் நெஞ்சை கலங்க வைத்துள்ளது. மேலும் துருக்கியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் துருக்கிக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.