
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை திருவிழாவாக இன்று நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கட்சியின் தொண்டர்கள் மாநாட்டில் பங்கு பெற அணி திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இது முதல் மாநாடு என்பதால், இதில் பங்கேற்போர் அனைவருக்கும் நினைவு பரிசாக தமிழக வெற்றிக் கழகம் புதிய சான்றிதழ் ஒன்றை வழங்க உள்ளது.
அதன்படி , மாநாட்டு திடலில் பல பகுதிகளில் ஒரு க்யூ ஆர் ஸ்கேன் கோட் வைக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்த பின் உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்ய கேட்கும். அப்லோட் செய்தவுடன் தமிழக வெற்றி கழகம் முதல் மாநில மாநாடு உங்கள் பெயர் மற்றும் புகைப்படம் பொறிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை திருவிழாவில் பங்கேற்று பெருமை சேர்த்தமைக்கு இச்சான்றிதழ் மகிழ்வுடன் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருக்கும்.