தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற போது அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக இடையே மட்டும் தான் போட்டி என்று விஜய் கூறினார். இதற்கு தற்போது அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே விஜய் அதிமுகவை விமர்சிக்காத நிலையில் அதிமுக இடத்திற்கு அவர் குறி வைத்து அப்படி சொன்னாரா இல்லையெனில் அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சந்தித்த தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருவதால் அப்படி கூறினாரா என்பது பெரும் கேள்வியாக மாறியுள்ளது.

இந்நிலையில் விஜயின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது, உண்மையான களம் அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான். தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக விஜய் அப்படி பேசியுள்ளார். ஆனால் உண்மையான போட்டி அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் என்று கூறினார். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களின் பெயர்களையும் சொல்லி வெளுத்து வாங்கியது பரபரப்பாக பேசப்படுகிறது