
டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் 2 புதிய வகை விஷ பறவைகளை கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்தோ பசிபிக் பிராந்தியம் முழுவதும் பரவலாக காணப்படும் ரீஜண்ட் விஸ்லர் மற்றும் ரூஃபஸ்-நேப்ஸ் பெல்பேர்ட் ஆகிய 2 பறவைகளும் மனிதனைக் கொல்லும் விஷத்தன்மை வாய்ந்தது. இந்த பறவைகள் நியூ கினியாவின் காடுகளில் காணப்படுகிறது. இந்த பறவைகள் விஷத்தன்மை உள்ள உணவினை உட்கொண்டு அதை தன்னுடைய இறக்கைகளிலும் சேமித்து வைக்கிறது. இந்த பறவைகளில் இருக்கும் நியூரோடாக்ஸின் விஷத்தை பொறுத்துக் கொள்ளும் மற்றும் இறக்கைகளில் விஷத்தை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.

இந்த தகவலை டென்மார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் Knud, j, nsson என்பவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படும் டார்ட் தவளைகளை போன்று அந்த 2 பறவைகளிடமும் விஷம் இருப்பதால் அவைகள் மனிதனை சிறிதளவு தொட்டாலும் உயிர் போய்விடும். மேலும் பறவைகள் இவ்வளவு நச்சுத்தன்மை கொண்ட நியூரோடோக்ஸினை எப்படி பொறுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.