
மலேசியாவின் கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்துடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 58 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை சேர்ந்த வீராங்கனை திரிஷா கோங்கடி பேட்டிங் செய்தபோது சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் அடித்த முதல் வீராங்கனை திரிஷா கோங்கடி என்பது குறிப்பிடத்தக்கது.