தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் இன்னும் 4 புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்க இருக்கிறார்கள். இந்நிலையில் திமுக கட்சியில் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை பற்றி பார்க்கலாம்.

முதலில் சினிமாவில் தன் கேரியரை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக கடந்த2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த உதயநிதி, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதிமுக, பாஜகவின் நிலைப்பாடுகளை விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.

இளைஞரணி பொறுப்பு

திமுகவின் இளைஞரணி பொறுப்பை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருக்கு ஒதுக்கியார்.

சேப்பாக்கம் தொகுதி வெற்றி

2021 சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் நுழைந்தார்.

அமைச்சர் பதவியில் முன்னேற்றம்

2022ஆம் ஆண்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அரசுப் பணியில் தொடர்ந்து செயல்பட்டார்.

துணை முதல்வர் நியமனம்

முன்னேற்றம் அடைந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார், அவரின் பொறுப்புகள் மேலும் விரிவடைந்துள்ளன.