
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மதுரை மாநாட்டில் பார்த்திருப்பீர்கள்…. எல்லோருக்கும் அறுசுவை உணவு. பெருசா ஆடம்பரம் இருக்காது, சுவையான உணவு போடுவோம் என சொன்னாங்க. சாதாரண ஒரு கிராமத்துல தெருவுல கூட புளிசாதம் செஞ்சா எப்படி இருக்கும்? எப்படி கேட்டு வாங்கி சாப்பிடுவோம் ? ஆனால் மதுரை மாநாட்டு புளியோதரைல சரியா கூட அரிசி வேகல… வெந்த அரிசி கூட போடாம, அங்க மலை மலையா குவித்து வைக்கப்பட்டது, வேஸ்ட் ஆனது தெரியும்.
முன்னாள் அமைச்சர்கள் அவ்வளவுதான், அவங்களோட செயல்பாடு. ஒரு புளி சாதத்தைக் கூட ஒழுங்கா கொடுக்க தெரியாதவர்கள், இவர்கள் எப்படி ஆட்சி நடத்த முடியும். கொள்ளையடிக்க தான் தெரியும் அவர்களுக்கு… முறைகேடு செய்ய தான் தெரியும்… அண்ணன் தம்பிக்கு நண்பர்களுக்கு டென்டரை கொடுத்து, மக்களை ஏமாற்ற தான் தெரியும். அவர்கள் என்னமோ எங்கள் கூட்டத்தைப் பார்த்து உலகமே வியக்கப் போகிறது என்று சொன்னார்கள், உலகமே கைத்தட்டி சிரிக்கிறது. உங்களுக்கு தெரியும்..
சோசியல் மீடியாவுல… அங்கு வந்த தொண்டர்களும், ஆண்களும், பெண்களும் பசியால் சாம்பாரை அள்ளி குடிக்கிறான். பாத்தீங்களா ? இல்லையா ? இதெல்லாம் நம்ம எடுத்து போட்டோமா, எல்லா தொலைக்காட்சியிலும் வருது. பொதுவான தொலைக்காட்சியில் வருது. 20 லட்சம் பேர் வருவேன்னு சொன்னாங்க.. ரெண்டு லட்சம் பேர் கூட வரல. எவ்வளவோ கோடி பணம் செலவு பண்ணி, வாரீங்களான்னு ரோட்டுல நின்னு கூவி, எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தும், பிரியாணி கொடுத்தும் யாரும் வரல என தெரிவித்தார்.