உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள பள்ளியில் 3 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு, அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்தச் சிறுமி பள்ளிக்கு வர பயந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட சிறுமியின் பெற்றோர், அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, சிறுமி அழுது கொண்டே தனக்கு நேர்ந்த துன்பங்களை பற்றி கூறினார். பள்ளியில் சாப்பாடு போடும் மாமா அசிங்கமான காரியங்களை செய்ததோடு, எனது அந்தரங்க உறுப்பில் ஒரு கூர்மையான பொருளை வைத்து தாக்கினார் என்று கூறினார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமியின் அந்தரங்க உறுப்பு சிதைக்கப்பட்டு இருப்பதாக கூறினர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர். அதன் பின் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவர் திருமணமானவர் என்பதும், அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் வங்காளதேசத்தில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.