2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் காலாவதியான பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல் கடலோரப் பகுதிகளை இணைக்கும் வகையில் படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடலோரப் பகுதிகளில் மாங்குரோவ் காடுகளை வளர்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும். புதிதாக கூட்டுறவு சங்கம், மீனவ கூட்டுறவு சங்கம், பால்வள கூட்டுறவு சங்கம் தொடக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.