
நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள், சங்கப்பாடல் சொல்வது வழக்கமாகும். ஆனால் இன்று திருக்குறள், சங்கப்பாடல் சொல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2019 ஆம் ஆண்டு புறநானூற்று பாடலையும், 2020ல் பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து, 2021ல் இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறள்களை கூறிய நிலையில், இன்றைய பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.