ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் ஆன பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி நீண்ட காலமாக செயல் முறையில் இல்லாத செல்போன் எண்களோடு இணைக்கப்பட்டுள்ள UPI ஐடிகளை ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்தியால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் இந்த நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் ஒன்றை வெளியிட்டது.

அதுபோல செல்போன்களை மாற்றி அதை வங்கிகளுக்கு தெரிவிக்காமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் UPI ID நீக்கப்படும் .இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் செயலில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உடனடியாக புதிய செல்போன் எண்ணை வாங்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் . ஆன்லைன் மோசடியாளர்கள் UPI ஐடியை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.