போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தவறாக ஒருவருக்கு நீங்கள் அனுப்பிய பணத்தை எப்படி உங்கள் அக்கவுண்டுக்கு திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். நீங்கள் கூகுள் பே மற்றும் ஃபோன் பே என எந்த ஒரு யுபிஐ அப்ளிகேஷனை பயன்படுத்தி பிறருக்கு பணம் அனுப்பி இருந்தாலும் முதலில் யுபிஐ அப்ளிகேஷன் இன் customer care- க்கு புகார் அளிக்க வேண்டும். மேலும் NPCI போர்ட்டலிலும், RBI இன் CMS-லும் புகார் அளிக்கலாம்.