இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. இருந்த இடத்திலிருந்து இருந்து கொண்டே மற்றவர்களுக்கு பணம் அனுப்பவும் அவர்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கும் யுபிஐ செயலிகளை மக்கள் பலரும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜிபே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலிகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் UPI பேமெண்ட் மூலமாக ஒரு நாளில் எவ்வளவு பணம் செலுத்தலாம் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வது அவசியம். UPI மூலமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான வரம்பை நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிர்ணயித்துள்ளது. NPCI இன் படி, எந்தஒரு UPI பயனரும் ஒரு நாளில் எந்த ஒரு நபருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். அதனைப் போலவே மூலதன சந்தை, காப்பீடு மற்றும் வணிக பரிவர்த்தனைகள் மீதான UPI வரம்பு இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்.