டெல்லியில் யுபிஎஸ்சி தேர்வுக்காக இளம் பெண் ஒருவர் தயாராகி வந்துள்ளார். இந்தப் பெண் தேர்வுக்காக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தனக்கு தேர்வில் வெற்றி பெறுவதற்கான சில வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த ஐஏஎஸ் அதிகாரி அந்த பெண்ணிடம் நீ மிகவும் ஹாட்டாக இருக்கிறாய். இதற்கு என்ன பதில் கிடைக்கும் என்று கேட்டுள்ளார். இதேபோன்று ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் அந்த பெண்ணுக்கு அடிக்கடி காய் எப்படி இருக்கிறாய் என்று தனிப்பட்ட முறையில் செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.

அந்தப் பெண் மூத்த அதிகாரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பினால் அவர்களே இப்படி ஆபத்தானவர்களாக மாறுவது அச்சமூட்டுகிறது என்று சோசியல் மீடியாவில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் யுபிஎஸ்சி தேர்வில் மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல் நன்னடத்தையையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அறிமுகம் இல்லாதவர்களிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சிலர் பதிவு செய்யும் நிலையில் கண்டிப்பாக அந்த அதிகாரிகளின் நடத்தையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.