ஆந்திர மாநிலத்தில்  முதல் மந்திரி  ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதிய திட்டம், சர்வதேச பட்டய படிப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச பட்டய படிப்பு தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற மசோதாக்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சொந்தமாக வீட்டுமனை இல்லாத அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தில் சொந்த வீடு வழங்கப்படும்.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியான மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 50000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜகன்னா சிவில் சர்வீசஸ்   திட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும். ஆரோக்கிய ஸ்ரீ திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.