
திமுக சார்பில் நடந்த வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், எல்லாத்துக்கும் மேல பொல்லாத ஆட்சி பொள்ளாச்சி, அதுவே சாட்சி அப்படின்னு கொதித்து எழுந்தாங்க மக்கள். மறந்துருச்சா ? பொள்ளாச்சி பாலியல் கொடுமை இன்னும் நெஞ்சிலே ஈரம் காயல. எல்லோரையும் கதற வச்சது. ஆனால் பழனிச்சாமி இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படல. இதுதான் பழனிச்சாமி ஆட்சியினுடைய லட்சணம்.
இதையெல்லாம் மக்கள் மறந்துட்டு இருப்பாங்கன்னு நினைச்சு, வாய் சவடால் விட்டிருக்கிறார் திருவாளர் பழனிச்சாமி. இத்தோடு நிறுத்தினால் பரவாயில்லை. இன்னொன்னு சொல்றாரு…. திமுக குடும்ப கட்சியாம். ஆமாம்…! குடும்ப கட்சி தான். அழுத்தம் திருத்தமாக நான் சொல்லுவேன். திமுக குடும்ப கட்சி தான். கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்களை வாழ வைக்கின்ற கட்சி தான் திமுக. திமுக குடும்ப கட்சி தான்.
பேரறிஞர் அண்ணா, தமிழின தலைவர் கலைஞர் காட்டிய பாதையில் ஒற்றை கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களில் மனதில் மகிழ்ச்சியை உருவாக்கின கட்சி தான் திமுக. குடும்ப கட்சி தான். பச்சை பொய் பழனிச்சாமி அவர்களே…! சம்மந்திக்கும், சம்பந்தியோட சம்மந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, ஹை கோர்ட் – சுப்ரீம் கோர்ட்டு ஓடிக்கிட்டு இருக்கக்கூடிய உங்களுக்கு குடும்பக் கட்சி பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு ? என்ன அருகதை இருக்கு ? இந்த கேள்வியைத் தான் நான் கேட்கிறேன்.
கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்து முடிந்த அனைத்து தேர்தலிலும் தோற்றவர் பழனிச்சாமி. ஆக வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் முழுமையாக தோற்கடிக்கப்பட இருக்கின்றார். பாஜகவின் உடன் இருந்தால் டெபாசிட் கிடைக்காதுன்னு…. அந்த டெபாசிட்டை காப்பாத்திக்க… தனியா பிரிந்தால் ? தனியா பிரிஞ்ச மாதிரி…. உள்ளே, வெளியே நாடகத்தை இப்ப நடத்திக்கிட்டு இருக்காரு என விமர்சித்தார்.