ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில், 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் 101 ரன்கள் அடித்துத் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனை செய்ததற்குப் பின்னணியில், அவரது சிறு வயது ஆர்வமும், தந்தை சஞ்சீவின் உறுதிப்பாடும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் அவர் சதம் அடித்ததும் அதனை கொண்டாட, ராஜஸ்தான் அணியின் ஆலோசகரர் ராகுல் டிராவிட் வீல் சேரில் இருந்து எழுந்து கைதட்டி கொண்டாடினார். அதற்கு காரணம் வைபவை ராஜஸ்தான் அணிக்குள் கொண்டு வந்தது அவர்தான். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 14 வயதான வைபவ் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இதன் பின்னணியில் டிராவிட் தான் இருக்கிறார். ட்ராவிட் எப்படி வைபவ் வளர்ச்சிக்கு முக்கிய காரணமோ, அதேபோன்று முன்னாள் வீரர் வி வி எஸ் லட்சுமணனும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய ரோல் வகிக்கின்றார். ரஞ்சிக்கோப்பையில அறிமுகமான வைபவ் பிசிசிஐ நடத்திய யூ 19 சேலஞ்சர் போட்டியிலும் பங்கேற்றார்.

அப்போது தான் வைபவ் முதல் முறையாக விவிஎஸ் லட்சுமணனை நேரில் சந்தித்திருக்கிறார். அப்படி ஒரு நாள் இந்திய அணிக்காக களம் இறங்கிய வைபவ் 49 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அவுட்டானார். அதன் பின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்று அவர் பெரிய ஸ்கோர் அடிக்கும் வாய்ப்பு இழந்ததை நினைத்து அழதுள்ளார்.

இதையடுத்து வைபவை சமாதானப்படுத்த சென்ற லக்ஷ்மணன் இங்கே நாங்கள் ரண்களை மட்டும் பார்க்கவில்லை. நீண்டகாலம் அணிக்காக விளையாடும் திறமை உள்ளவர்களையும் நாங்கள் விரும்புகிறோம் என்று அவரைத் தேற்றி இருக்கிறார். அப்போது வைபாவுக்கு 12 வயது.

போட்டிகளில் ரன்கள் எடுப்பதில் கொண்டிருந்த ஆர்வத்தால் ஏற்கனவே கவனத்தை ஈர்த்த வைபவின் திறமையை உணர்ந்த லட்சுமணன் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பரிந்துரைத்தார். அப்படித்தான் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட வைபவ் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விளையாட முடியாத நிலையில் ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.