திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மண்டலத்தின் பொறுப்பாளர் சகோதரர் சீனிவாசன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்..  மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து,  இன்றைக்கு மாநில துணைச் செயலாளராக பொறுப்பு உயர்வு  கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த பகுதியைச் சேர்ந்த மாநில துணைச் செயலாளர் சகோதரர் ஆனந்தகுமார், இங்கே மாவட்ட துணை அமைப்பாளராக…

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டிய காரணத்தினால்,  நம்முடைய தலைவர் அவர்களால் கைகாட்டப்பட்டு இன்றைக்கு மாநிலத் துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இங்கு இருக்கக்கூடிய இரண்டு மாவட்ட கழக செயலாளர்களும் நம்முடைய இளைஞர் அணியில் இருந்து வந்தவர்கள் தான். அதனால்தான் இளைஞர் அணி நிகழ்ச்சி என்றால், ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சி எல்லாம் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

மதுரா செந்திலும் அப்படித்தான்…  மாவட்ட துணை அமைப்பாளர், பிறகு மாவட்ட இளைஞர் அமைப்பாளராக இருந்து  இன்றைக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு நம்முடைய தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த பொழுது உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல பணிகளை சிறப்பாக செய்து கொடுத்ததன் அடிப்படையில் தான் இன்றைக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர் என் அருமை சகோதரர் திரு மதிவேந்தன் அவர்களும் நம்முடைய இளைஞர் அணியில் இருந்து…. துணை அமைப்பாளராக சிறப்பாக செயலாற்றி  இன்று மாவட்ட அமைச்சராக நம்முடைய தலைவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்…..  இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின் உடைய முதலமைச்சர் நம்முடைய தலைவர் அவர்களும்,  இளைஞர் அணியில் பணியாற்றி தான் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கே முதலமைச்சராக ஆகி இருந்திருக்கிறார். கழகத்தின் தலைவராகவும் ஆகி  இருக்கிறார் .

சென்ற 2021 எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது….  சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு நாள் முழுக்க வந்திருந்தேன்….  அப்பொழுது நம்முடைய மாவட்ட கழகச் செயலாளர் ராஜேஷ்குமாரிடம் கேட்டேன்…  உங்களுக்கு மொத்தம் மூன்று தொகுதி… நாமக்கல்,  ராசிபுரம்,  சேர்ந்தமங்கலம் என 3 தொகுதியில் எத்தனை தொகுதி ஜெயிப்பீர்கள் அப்படின்னு கேட்டேன் ? அவர் சொன்னார்,  100% மூணு தொகுதியும் ஜெயிச்சி  காட்டுவேன் என்று சொன்னார்.

எப்பொழுதுமே சொன்னதை செய்து காட்டுபவர் திரு ராஜேஷ்குமார் அவர்கள்….  எதிலும் வல்லவர். வல்லவனுக்கு எல்லாம் வல்லவர். ஒரு விஷயத்தை யார் கிட்ட சொல்லி,  எப்படி அதை சாதிக்க வேண்டும் என்று அனைத்து வித்தையும் தெரிந்தவர் திரு ராஜேஷ்குமார் அவர்கள் என நெகிழ்ச்சியோடு பேசினார்.