
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் அங்கு புகழ்பெற்ற உணவாக கருதப்படும் ஜோலெட் ரொட்டியை தன் கைகளால் சமைத்துள்ளார்.
இந்த ஜோலெட் ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலமான உணவு என்று கருதப்படுகிறது. இந்த ரொட்டியை இரவு நேரத்தில் பெரும்பாலான வீடுகளில் கைகளால் தட்டி சமைப்பார்களாம். இதன் சத்தம் கூட இனிமையாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் வீட்டுக்குள் சென்று ரொட்டியை தன் கைகளால் சமைத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
Tried my hand on making Jolad Roti (Jwar Roti) in between the hectic election campaign in Karnataka. #MilletFood pic.twitter.com/0rsvqyfQ07
— Vanathi Srinivasan ( Modi Ka Parivar) (@VanathiBJP) May 1, 2023