
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிறப்பான இம்முயற்சிக்காக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சுறுத்தலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு பாதுகாப்பான புகலிடம் வன்தாரா. இந்த ஜீவகாருண்ய முயற்சிக்கு ஆனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.