நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், குஷ்பூ, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர். மேலும் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியான வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் இப்படம் வெளியாகி  11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தில் உள்ள  ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ என்ற  பாடல் பிரபலமாகி 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை படக்குழு தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.