
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் திருடி விட்டு தப்பி வந்த திருட்டு கும்பல் நாமக்கல்லில் தமிழக காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திருடர்களை பிடிக்கும் போது பெரிய தகராறு ஏற்பட்டதில் ஒரு திருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் அதோடு மற்றொருவன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் 5 திருடர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது பின்வருமாறு :-
*இந்த திருட்டு கும்பல் இடம் ஆந்திரா மற்றும் கேரளா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் ஒடிசா மாநில காவல் துறையினரும் சம்பவத்தை கேட்டறிந்து உள்ளனர்.
*இவர்கள் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளையடித்துவிட்டு தான் இங்கு வந்துள்ளனர். *மேலும் இவர்களுக்கு கிருஷ்ணகிரியில் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தி வருகிறோம்.
*இவர்கள் மீது வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் வழக்கு இருக்கிறது.
*இவர்களுள் படித்தவர்களும் இருக்கின்றனர் படிக்காதவர்களும் இருக்கின்றனர்.
*ஏடிஎம் மையங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து கூடுதல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள அறிவுறுத்த உள்ளோம். *மேற்கொண்டு ஏதும் தகவல் தேவைப்பட்டால் காவல்துறையின் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்.
*இந்த திருட்டு கும்பலில் இரண்டு பேர் டெல்லியில் இருந்து விமானத்தில் இருந்தும் மேலும் 3 குற்றவாளிகள் காரிலும் மற்றும் 2 குற்றவாளிகள் கண்டெய்னர் லாரியிலும் வந்து சென்னையில் ஒன்றிணைந்து திருச்சூர் சென்றுள்ளனர்.
*அவர்களிடமிருந்து 67 லட்சம் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டோம்.
*இந்த திருட்டு கும்பல் அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லையில் மேவாட் ஏரியாவை சுற்றியுள்ள 2,3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
*இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக முழுக்க முழுக்க நாமக்கல் காவல்துறை மட்டுமே இரவு பகலும் பாராது உழைத்துள்ளனர். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியுள்ளார்.