
குறும்பட டைரக்டர் ரமணன் புருசோத்தமா இயக்கத்தில் பாபிசிம்ஹா நாயகனாக நடித்திருக்கும் படம் “வசந்த முல்லை”. இப்படத்தில் பாபிசிம்ஹாவுக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேசி நடித்து உள்ளார். அதோடு நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். எஸ்.ஆர்.டி. எண்டர்டைன்மென்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசை அமைத்துள்ளார்.
திரில்லர் வகை திரைப்படமாக “வசந்த முல்லை” படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வசந்த முல்லை படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The trilingual mystery entertainer #VasanthaMullai aka #VasanthaKokila trailer is out now 🔥#Tamil – https://t.co/DEg0yaG1pB#Telugu – https://t.co/mx1P2F2Kjm#Kannada – https://t.co/jrX9xYkTWs
🍿In theatres from Feb 10 2023 ✨ pic.twitter.com/Clv6QxdqxR
— Ram Talluri (@itsRamTalluri) February 6, 2023