
அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், விக்ரம் பிரபு , திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் போன்றவைகள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படக்குழு பொன்னியின் செல்வன் 2 படத்தின் 2-ம் பாடல் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீர ராஜ வீர என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வீர ராஜ வீர பாடல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயம் ரவி மற்றும் வானதி காட்சிகள் அடங்கிய வீர ராஜ வீர பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Get mesmerized by the scintillating #VeeraRajaVeera, all set to rule your hearts and playlists!
▶️ https://t.co/SJQetfS2tq#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman… pic.twitter.com/32jIBn7EVh
— Lyca Productions (@LycaProductions) April 8, 2023