கூகுளின் புதிய “Ask Photos” அம்சத்தைப் பயன்படுத்தி, இப்போது நீங்கள் எளிதாகப் புகைப்படங்களைக் கண்டறியலாம். உங்கள் கேலரியில் புகைப்படங்களை தேடுவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளதாக கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் இதனை சோதித்து வருகிறது.

இது செயல்பாட்டுக்கு வரும்போது குரல் மூலம் மியூசிக், காண்டாக்ட் தேடுவது போல உங்கள் கேலரியில் உள்ள போட்டோக்களை எளிதாக தேடி எடுக்க முடியும். உதாரணமாக கடந்த வாரம் அவுட்டிங் சென்ற போது என்ன சாப்பிட்டோம்? என்று கேட்டால் அது தொடர்பான போட்டோ உடனடியாக வரும்.