தயாரிப்பாளர் சங்கம் கலைஞ்சர் நூற்றாண்டு விழா நடத்துறாங்க நீங்க பங்கேற்பீர்களா ? என்ற கேள்விக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

என்னை அழைக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். அழைத்தாலும் நான் போக மாட்டேன் என்றும் தெரியும். அதனால் அழைக்க மாட்டார்கள். ஜோ படம் பார்த்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதைப்பற்றி கேளுங்கள். நீங்கள் நான் இவ்வளவு நேரம் படத்தை பற்றி சொல்லி உலகத்தில் எப்படி பார்த்தாலும்,  கூட்டி கழித்து பார்த்தால் அன்பு மட்டும்தான் மிஞ்சுகிறது.

அன்னை தெரசாவை எடுத்துக் கொண்டீர்கள் என்றால்,  அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு வந்தால் கூட வீசா,  பாஸ்போர்ட் வேணும். இந்திய நாட்டின் பிரதமர் வேறு நாட்டிற்கு போனால் கூட பாஸ்போர்ட் வீசா வேணும். ஆனால் அன்னை தெரசாவிற்கு எந்த நாட்டிற்கு செல்வதற்கும் கடவுச்சீட்டும் தேவையில்லை,  அனுமதி தேவையில்லை.

எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும்….. எப்ப வேணாலும் வாங்க  தாயே…  இந்த நாட்டில் எங்க  கூடியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களோ,   அங்கு குடியிருங்கள் தாயே என்று உலகம் கைவிரித்து அழைத்ததற்கு காரணம் அன்புதான்… குடும்ப ஒற்றுமையாக இருக்க வேண்டுமா….  அப்பா பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா…  கணவன் – மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டுமா ? எப்படி பார்த்தாலும் காதல் தான். அண்ணன் பலமுறை சொல்லி இருக்கிறேன். காதல் ஒன்றும் இல்லை. உலகத்தில் காதல் இல்லாமல் ஒன்னும் இல்லை. காதலித்து,  காதலுக்காக யாரும் சாகக்கூடாது.

காதலிக்காமலே யாரும் சாகக்கூடாது. இதுதான் உலகம் பூரா  இருக்கின்ற தத்துவம். அந்த அடிப்படையில்… சும்மா மேலோட்டமாக நண்பர்கள் இருந்தார்கள், சிரிக்க வைக்கும் என்பதற்காக நகைச்சுவை குத்தாட்டம்,  போட்டார்கள். அப்படியெல்லாம் இல்லை. மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார். நெகிழ்ந்து போற அளவிற்கு ஜே படத்தை எடுத்துக்  இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.