
டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது உருவாகி இருக்கும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இரண்டு பேரும் இணைந்து இசையமைக்கின்றனர்.
அதோடு இப்படத்தில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் முதல் பாடலான “Head up High” பாடல் நாளை 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் கஸ்டடி படத்தின் புரோமோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த புரோமோ வீடியோவில் வெங்கட் பிரபுவை கைது செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.
Our director @vp_offl arrested by A.Shiva aka @chay_akkineni! But Why?🤔
Catch the interesting & fun-filled #Custody Promo
First single #HeadUpHigh releasing on April 10th @ 6:31PM💥@realsarathkumar @thearvindswami @IamKrithiShetty @ilaiyaraaja…
— Srinivasaa Silver Screen (@SS_Screens) April 8, 2023