தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “புஷ்பா”. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 2-வது பாகம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க, பல்வேறு முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் புஷ்பா-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.