இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. அதன் பிறகு நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்தியா ஆல் அவுட் ஆனதால் 3 நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துவிட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கிரிக்கெட் வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஒருவேளை அப்போட்டியில் கே.எல் ராகுல் விளையாடி ரன் குவிக்க முடியாமல் அவுட் ஆகி இருந்தால் அத்துடன் அவரது கிரிக்கெட் பயணமே முடிவுக்கு வந்திருக்கும். இதுபோன்ற பிட்ச் களில் ரன் குவிப்பது மிகவும் கடினமான விஷயம். விராட் கோலி போன்ற வீரருக்கு அது சவாலாக இருந்ததை பார்த்தோம். மேலும் கே.எல் ராகுல் மட்டும் இந்த போட்டியில் விளையாடி இருந்தால் அவருடைய கிரிக்கெட் பயணமே முடிவுக்கு வந்திருக்கும் என்று கூறியுள்ளார்.