
அண்மையில் காமெடி நடிகர் முத்துக்காளை நாளொன்றுக்கு ரூ. 15 ஆயிரம் என பேசி வெறும் 1500 ரூபாய்க்கு இறுதியாக கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதை அவர் வேதனையோடு தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி பேசியதாவது, என்னை போன்ற நடிகர்கள் குறைந்தபட்ச தொகையை நாளொன்றுக்கு வைத்திருப்பார்கள். இது அவர்களின் குடும்பச் சூழலை சமாளிப்பதற்கு போதுமானதாக இருக்கும்.
அவர்களுக்கு வேறு வேலைக்கு போக முடியாத நிலையில், சினிமாவை மட்டுமே நம்பி இருக்கின்றனர். ஆனால் இதனையும் குறைத்துக் கொடுத்தால் என்ன செய்வது. நான் ரூபாய்.1 லட்சம் வாங்குகிறேன். எனினும் இதுதான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்காமல் நல்ல கதைகள், பாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இவற்றை வைத்துக் குறைத்துக்கொள்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்கும் 3ஆயிரம் ரூபாய்கும் நடிக்கச் சொல்லும்போது தான் வேதனையாக உள்ளது என்று கூறினார்.