ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஒரு அரசு பல்கலை துணை வேந்தர்கள் கூட பங்கேற்கவில்லை. அரசு பல்கலைக்கழகங்களில் பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் இதுவரை ஒன்பது வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

பெரியார் பல்கலை இயக்குனர் அழகப்பா பல்கலை சார்பில் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பங்கேற்றுள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில் 12 துணை வேந்தர்கள் இல்லை. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் ஆளுநரின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

அதேபோன்று திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பஞ்சநாதன், அவிநாசி லிங்கம் பெண்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்தமிழ் செல்வன், சென்னை ஐஐடி, திருச்சி என் ஐ டி சார்பில் டீன் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.