தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கிட்டத்தட்ட 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்ற நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதன்படி 19 நிறுவனங்களுடன் சுமார் ரூ. 7618 முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் அமையும் நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் முயற்சியாக தமிழகத்தில் மீண்டும் FORD நிறுவனமும் கார் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின் நேற்று சிகாகோவில் இருந்து. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார். மேலும் சென்னை திரும்பும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.