தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்த உள்ளார். அவர் கட்சி தொடங்கிய நாளிலிருந்து அரசியல் கட்சிகள் ‌ பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் விஜய் பற்றி தொடர்ந்து தமிழக அரசியல் கட்சியினர் பலரும் தாங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீ ராம சீனிவாசன் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, விஜய் ஒன்றும் சிம்ம சொப்பனமல்ல. அவர் வெறும் சினிமா சொப்பனம் தான். எம்ஜிஆர் தவிர ‌ வேறு சினிமா பிரபலங்கள் அரசியலில் ஜெயித்ததில்லை. குறிப்பாக சிவாஜி, விஜயகாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோர் அரசியலில் தோல்வியை தழுவினர். இவர்கள் வரிசையில் விஜய்யும் விதிவிலக்கல்ல என்று கூறினார். மேலும் பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச் ராஜா திராவிட கட்சிகளுக்கு விஜய் நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.