
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்தி கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதோடு தவெக கட்சிக்கென பாடல் ஒன்றையும் வெளியிட்டார். தற்போது நடிகர் விஜய் கட்சி கொடிக்கான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதில் பகுஜன் கட்சி தவெக கட்சி கொடியின் யானை படத்தை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருச்சி வெள்ளாளர் கழக முன்னேற்ற தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியும் எங்களது கொடியும் ஒரே மாதிரி இருப்பதால் மக்களுக்கு குழப்பம் வந்துவிடும் இதனால் நடிகர் விஜய் அதை மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விஜயின் குடும்பத்தில் இருப்பதால் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
அவர் ஒரு முன்னணி நடிகர் அத்தனை மதங்களையும் ஜாதிகளையும் கடந்து பொது மனிதனாய் இருந்ததால் தான் அவர் இன்று ஒரு கட்சியை தொடங்கியுள்ளார். எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர் கட்சியை தொடங்கியுள்ளார். அதனால் எங்களது முழு ஆதரவை அவருக்கு அளிப்போம். மேலும் அவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்திற்கும் பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் அவர்கள் இதுபோன்ற சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர் எனவும் கூறியுள்ளார்.