
சமீபத்தில் நடிகர் விஜய் அவர்கள் அணிந்து செல்லும் காலணியின் விலை இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பெரிய திரையில் ரசிகர்களை கவர்வதற்காக மிக பிரம்மாண்டமான காட்சிகளில் நடித்தும் அதற்கு ஏற்றார் போல் உடைகளை அணிந்து மாஸாக வளம் வரும் தளபதி விஜய் அவர்கள் நிஜ வாழ்க்கையில் பல இடங்களில் மிக எளிமையான தோற்றத்தில் தான் காட்சியளிப்பார். அவரது தோற்றத்தை கண்டு அவரை போலவே உடை அணிய வேண்டும் என விரும்பும் ரசிகர்கள் மிகக் குறைந்த விலையில் அதே போல உடையை இணையத்தில் தேடி வாங்கி அணிந்து அதை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருவதையும் நாம் பார்த்திருப்போம்.

அந்த அளவிற்கு மிகவும் எளிமையான தோற்றத்தில் இருப்பவர் விஜய். அந்த வகையில், சமீபத்தில் அவர் பல இடங்களில் அணிந்து செல்லும் செருப்பு மிக எளிமையாக காட்சி தரும் வகையில் அமைய, ரசிகர்கள் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் கண்டிப்பாக விலை பல்லாயிர கணக்கில் தான் இருக்கும் எனவும், அது கண்டிப்பாக அந்நிய நிறுவனத்த்தின் தயாரிப்பாக தான் இருக்கும் எனவும் யூகித்து தேடி வர,
அது சென்னையை மையமாகக் கொண்ட ஒரு இந்தியன் கம்பெனி என்பது தெரிய வந்தது. அந்த நிறுவனத்தின் பெயர் லாங்குவேஜ். அதில், விஜய் அவர்கள் அணிந்திருந்த மாடலின் பெயர் கோல்டன் சாண்டல் ஸ்லீப்பர் மாடல். இதன் விலை தற்போதைய சந்தை மதிப்பில் 4290 ரூபாயாக உள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.