
லியோ படத்தின் கதை இது தான் என காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படம் தி ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கிற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரைலர் வெளியான நாள் முதல் ரசிகர்கள் இணையதளங்களில் கூறி வருகின்றனர். இந்நிலையில், பலரும் தி ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு லியோ கதை இதுதான் என லியோ கதையை மீம்ஸ் வாயிலாகவும், வீடியோக்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,
பிரபல கோபி, சுதாகர் அவர்களின் பரிதாபங்கள் youtube வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றை எடிட் செய்து லியோ கதையை நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பகிர அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் பழைய நண்பர்களை திருமணம் ஆன நண்பர் ஒருவர் சந்திக்கும் தருணத்தில், அவருடைய கடந்த கால புகைப்படங்கள், வீடியோக்களை அவரது மனைவிக்கு போட்டு காட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கும்.
அதை மையமாக வைத்து லியோ கடந்த காலத்தில் கேங்ஸ்டர் ஆக வாழ்ந்து பின் அந்த வாழ்க்கையை விடுத்து தான் ஒரு கேங்ஸ்டர் என்பதையே மறைத்து த்ரிஷா அவர்களை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்குள் சென்று இருப்பதாகவும், பின்னாளில் அது த்ரிஷாவுக்கு தெரிய வர, நல்லவர் போல் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டு திருமணம் செய்தீர்களே ? இப்படி எல்லாம் செய்திருக்கிறீர்களே ? என கேள்வி கேட்பது போன்றும் அதற்கு விஜய் பதில் சொல்ல திணறுவது போன்றும் காமெடியாக எடிட் செய்து பதிவிட்டுள்ளனர்.
இதை வைத்து பார்க்கையில், டிரைலரின் நடுவில் விஜய் அவர்கள் ஆபாசமாக ஒரு தருணத்தில் பேசுவார். அந்த காட்சி தான் த்ரிஷா அவர்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி விஜய்யிடம் கேட்கும் தருணமாக இருக்கும் என்பதை இந்த வீடியோ வாயிலாக இதை எடிட் செய்தவர் தெரிவிக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
😂😂😂😂😂 pic.twitter.com/NKX0OCSjEw
— Vaathi T V A (@mangathadaww) October 6, 2023