ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகரில் உள்ள படைத்தளத்தில் விமான பெண் அதிகாரியாக புத்கம் பணியாற்றி வருகிறார். இவர் தன்னை கடந்த இரண்டு வருடங்களாக விமான படைத்தளத்தில் உள்ள விங் கமாண்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நியூ இயர் பார்ட்டியின் போது எனக்கு பரிசு கிடைத்ததா என்று கேட்டார். நான் கிடைக்கவில்லை என்று சொன்னதும் அங்குள்ள அறைக்கு தனியாக அழைத்து சென்று ஓரல் செக்ஸ்க்கு கட்டாயப்படுத்தினார். என்னை விட்டு விடும்படி கதறி அழுதும் அவர் என்னை விடவில்லை. அவரை தள்ளி விட்டு நான் அங்கிருந்து ஓடி விட்டேன்.

எனக்கு நேர்ந்த உடல் மன ரீதியான சித்திரவதைகளை என்னால் சொல்ல முடியவில்லை. கடந்த ஜனவரியில் இருந்து இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்திருந்தேன். பெண் எனத் தோழிகளிடம் சொன்னபோது அவர்கள் கொடுத்த தைரியத்தின் அடிப்படையில் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். என்னை வன்கொடுமை செய்தவரே எனது புகாரை வழக்கு பதிவு செய்ய வந்தார். வேறு அதிகாரிகள் இல்லாமல் நான் ஸ்டேட்மென்ட் சொல்ல மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து விட்டேன். அவர் உயர் அதிகாரி என்பதால் நான் அளித்த புகாரை ஓரம் கட்டி விட்டனர்.

மறுபடியும் புகார் அளித்தேன் அதுவும் தட்டி கழிக்கப்பட்டது. எதுவும் வேண்டாமென்று பணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தேன் அதுவும் மறுக்கப்பட்டது. எந்நேரமும் எனக்கு திக் திக் என்றிருக்கிறது. என்று காவல்துறையிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.