நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என போட்டி ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.