
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை அமைதியாக முறையில் கொண்டாடுவதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருக்கின்றார்கள் என்று தமிழக DGP தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்படும் போது ஒரு சில இடங்களில் அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்படும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 13 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி களிமண்ணால் செய்யப்பட்டு விநாயகர் சிலை மட்டும் வைக்க வேண்டும். ரசாயனம் கலந்த விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை.
சிசிடிவி கண்காணிப்பு மற்றும் ட்ரோன் மூலம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்காணிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட பகுதியில் மட்டும் ஊர்வலம் செல்ல வேண்டும்.
சிலைகள் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
கல்வி நிறுவனம், வேற்று மத இடங்களில் விநாயர் சிலை நிறுவ கூடாது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அனுமதிக்கப்பட வாகனம் தான் ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும்.
விழா அமைப்பாளர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு பந்தல் அமைக்க கூடாது.
24 மணி நேரமும் விழா ஏற்பாட்டாளர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் இருக்க வேண்டும்.
ஊர்வலம் செல்லும் இடங்கள், சிலை கரைக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். பிற நேரங்களில் ஒளிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் மத துவேஷம் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.
விநாயகர் சதுர்த்தி தொடர்பான தகவல்களுக்கு 04428447701 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என கூறி, பொதுமக்களுக்கு இடையூறு சட்டம் ஒழுங்கு ஏற்படாமல் விழாவை கொண்டாட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.