
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களின் 2-வது பட்டியலை பாஜக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதில் ஹரியானா எம்.எல்.ஏ தேர்தலில் தினேஷ் போகத்தை எதிர்த்து யோகேஷ் பைராகி களம் இறங்கியுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.
இணையடுத்து ஜூலானா தொகுதி வேட்பாளராக தினேஷ் போகத் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து பைராகி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யோகேஷ் பைராகி (35) இவர் ஏர் இந்தியாவின் முன்னாள் பைலட் ஆவார். இவர் சென்னையில் வெள்ளம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் “வந்தே பாரத்” திட்டத்தில் அரசுடன் இணைந்து முக்கிய பங்காற்றினார். அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டார்.