
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சிலர் பிரபலமாக வேண்டும் என்பதற்காக வித்தியாசமான செயல்களை செய்து வருகிறார்கள். அதன்படி நாடியா கர் என்ற பெண் உலகளவில் இணையத்தில் பிரபலமாக இருக்கிறார். இவர் சொகுசு காரர்களில் அடிக்கடி வலம் வருவது போன்ற வீடியோவை பதிவேற்றி பிரபலமானார்.
அந்த வரிசையில் துபாயில் உள்ள மிருக காட்சி சாலையில் பூங்காவில் புலியோடு நடந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் துபாயில் என்னுடைய செல்லப் புலி அழைத்து செல்வது வித்தியாசமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ள நிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டுள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
View this post on Instagram