
ஒரு பெண், உலகின் மிகக் கொடூரமான வேட்டையாடுவற்றில் ஒன்றான ஒரு பெரிய முதலைக்கு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், அந்தப் பெண் பயங்கரமான அந்த முதலையின் தலையில் துணிச்சலாக முத்தமிடுகிறார். இந்த துணிச்சலான செயல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த வீடியோவுக்கு கீழே பலர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் அந்தப் பெண்ணின் செயலை கண்டித்துள்ளனர். முதலைகள் மிகவும் ஆபத்தானவை என்பதையும், அவை எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதையும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டியுள்ளனர்.
View this post on Instagram
“>