கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்கறை பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் இருந்து பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது.

இந்நிலையில் மணமக்களை செண்டை மேளத்துடன் நடனமாடியபடி அழைத்து வந்த நண்பர்கள் அவர்களுக்கு மண் சட்டியில் விருந்து கொடுத்து அசத்தியுள்ளனர். அந்த உணவை மணமக்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டனர். இதனை பார்த்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போல ஒற்றுமையாக வாழ வேண்டும் என வாழ்த்தி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.