
விருந்தாவனத்தை சேர்ந்த ஆன்மிக குரு பிரேமானந்த் ஜி என்பவர் பகவத் புராணம் போன்ற வேதங்களை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் தனது சொற்பொழிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் இவரது பக்தர்கள் ஆவர். இந்நிலையில் இவர் ஒரு லக்ஸுரி காரில் பயணிக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ 2025 ஏப்ரல் 4ஆம் தேதியுடன் வீடியோ வைரலான நிலையில் அது எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை.
அந்த வீடியோவில், குரு பிரேமானந்த் ஜி ஒரு புகழ்பெற்ற போர்ஷே காரில் பயணித்த போது அவரது உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் காருடன் ஓடி பாதுகாப்பு அளிக்கிறார்கள். அப்போது சாலை ஓரத்தில் வரிசையாக நின்ற பக்தர்கள் அவரை வணங்கிய போது பிரேமானந்த் ஜி பக்தர்களின் கூட்டத்தை பார்த்து கைகளை கூப்பி வாழ்த்துவது காணப்படுகிறது.
இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் “தன்னெழுச்சியையும், எளிமையையும் போதிக்கும் குருவின் போதனைகளுக்கு இது எதிராக உள்ளது” என விமர்சித்துள்ளனர்.
Porsche for babas and maharajas. People in India don’t really understand Marx. pic.twitter.com/pNYzGPWqct
— Lord Immy Kant (Eastern Exile) (@KantInEast) April 11, 2025
ஆனால், பலர் அவரை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர். “இந்த கார் பிரேமானந்த் ஜிக்கு சொந்தமானது அல்ல…அவரது பக்தர் ஒருவர் அவருக்கு சவாரியாக கொடுத்தார்,” என்றும், “அவர் பல்வேறு கார்களில் பயணிப்பது சக பக்தர்கள் அவருடைய ஆசிர்வாதம் கிடைப்பதற்காக தங்களுடைய காரை பயணம் செய்ய பயன்படுத்துமாறு கேட்பார்கள் என்று கூறினார். அதோடு அவர் எளிமையான வாழ்க்கையைப் பின்பற்றுபவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” எனவும் அவருடைய பக்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.