இந்திய விளையாட்டு வீரரான விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இன்னோவேஷன் லேப் இந்தியன் ஸ்போர்ட்ஸ்  நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விராட் கோலி “தன்னுடைய ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்போவதில்லை எனவும்  கிரிக்கெட்டிற்காக நான் தொடர்ந்து விளையாடுவேன் யாரும் தயவு செய்து பதற்றப்பட வேண்டாம் எந்த அறிவிப்பும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்விற்கு விராட் கோலி கலந்துகொள்ள வந்தபோது அவரைப் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வந்தனர். அங்கு ஒரு பெண் ரசிகை ஒருவர் அவரது ஓவியத்தை வரைந்து அவரிடம் காண்பிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களால் பாதுகாப்பு காவலர்கள் அவரை ஒதுங்கி நிற்க வைத்தனர்.

இருப்பினும் விராட் கோலி அந்த ஓவியத்தை கவனித்து அந்தப் பெண்ணின் அருகே சென்று அவரது ஓவியத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்துவிட்டு சென்றார். இச்சம்பவம் காண்போரை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.  இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பலரும் விராட் கோலிக்கு தங்களது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.