பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தான் ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரராக இருந்ததாகவும், பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது கேப்டன்சியில் விளையாடி இருந்ததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிரபல ஜீ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். “நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தேன். அதைப் பற்றி யாரும் பேசவில்லை. விராட் கோலி எனது கேப்டன்சியில் விளையாடி இருந்தார். எலும்பு முறிவு காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலக நேர்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வி யாதவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விராட் கோலியும் தேஜஸ்வி யாதவும் ஜூனியர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக பல ஆட்டங்களில் இணைந்து விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல், அரசியல் களத்தில் இருந்து விளையாட்டு களத்திற்கு கவனத்தைத் திருப்பியுள்ளது.