
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கம் அனைத்து சிறு-குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு தொகையாக வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் கடந்த 2019 பிப்ரவரி முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் வாயிலாக ரூபாய்.6000 நிதியுதவியை 3 தவணைகளில் ரூ.2000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். எனினும் கிசான் திட்டத்தின் வாயிலாக ரூ.2 ஆயிரத்தை பெறுவதற்கு கண்டிப்பாக KYC செய்யவேண்டும்.
KYC செய்தால் மட்டும்தான் பணம் கிடைக்கும். இல்லையென்றால் நடப்பு ஆண்டிற்கான பிஎம் கிசான் 3-வது தவணை கிடைக்காமல் தேக்கம் அடையலாம். நீங்கள் முன்பே KYC முடித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. நீங்கள் இன்னும் இதை செய்யவில்லை எனில் விரைந்து செல்லுங்கள். அதனை முடித்தால் தான் உங்களுக்கான பணம் கிடைக்கும். அதை எளிதாக செய்வதற்குரிய வழியை உங்களுக்கு நாங்கள் கூறுகிறோம். இந்த திட்டத்தின் கீழ் பணம் பெறும் விவசாயிகள் KYC-ஐ ஆன்லைனில் (அ) ஆஃப்லைனில் செய்யலாம்.
Online-ல் மொபைலில் க்ரோம் பிரவுசரின் பிஎம் கிசான் இணையத்தில் KYC எனும் ஆப்ஷனானது இருக்கும். இதன் வாயிலாக KYC-ஐ நிரப்ப இயலும். இதற்கு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் உங்களுடன் இருந்தால் போதும். உங்களால் மொபைலில் செய்ய இயலவில்லை எனில், இ-சேவை மையத்துக்கு சென்று ஆதார் KYC-யை முடிக்கலாம். இதற்கு குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தவேண்டும். இப்படி 2 வழிகளில் பிஎம் கிசான் KYCஐ முடிக்கலாம்.
ஆகவே கூடிய விரைவில் KYC செய்யுங்கள். அப்போதுதான் பிஎம் கிசான் 14-வது தவணை பணத்தை பெறலாம். இல்லையென்றால் தவணை வராமல் நிறுத்தப்படும். இருப்பினும் பிரதான மந்திரி கிசான் திட்டத்தின் 3-வது தவணை இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என தெரிகிறது. எனவே அதற்குள் KYC செய்தால் தடையில்லாமல் பணம் கிடைக்க ஏதுவாக இருக்கும்.