அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அசாம் சென்றுள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்று உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். இது குறித்து காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது இணையதள பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறியதாவது,” பிரதமர் மீண்டும் மணிப்பூர் மக்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளார். அவர் கவுகாத்திக்குச் சென்று அங்கு ஒரு இரவைக் கழித்தார். அருகிலுள்ள மணிப்பூருக்குச் செல்லவில்லை. இது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் கடந்த இருபத்தொரு மாதங்களாக மிகுந்த துயரம், வலி, வேதனை மற்றும் துன்பங்களைச் சந்தித்த மணிப்பூர் மக்களை திரு. மோடி எப்போது நேரடியாகச் சென்றடைவார்”.

அனைத்தும்  அவர்கள் பாஜகவுக்கு கொடுத்த பிறகும்,கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இவ்வளவு தீர்க்கமான தீர்ப்பை வழங்கிய பிறகு? அவர்கள் காத்திருந்து காத்திருந்து காத்திருக்கிறார்கள்…….. என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.