பெங்களூரை சேர்ந்த ராஜ்துலாரி சின்ஹா என்ற 76 வயது மூதாட்டி காலையில் நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவர் செல்லும் வழியில் சுற்றித்திரிந்த பத்துக்கும் அதிகமான தெருநாய்கள் சின்ஹா மீது பாய்ந்து கடித்து குதறி உள்ளது.

தெரு நாய்களிடமிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சின்ஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஹரிகிருஷ்ணா என்ற நபர் X வலைதள பக்கத்தில் தன்னால் நாய்களிடமிருந்து மூதாட்டியை காப்பாற்ற முடியாதது தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாக வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.