உலக அளவில் மிகப் பிரபலமான கேளிக்கை பூங்கா நிறுவனம் தான் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது வரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முன்னதாக கொரோனா காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வால்ட் டிஸ்னி நிறுவனம் 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம், 5.5 அமெரிக்க டாலர்களின் செலவை மிச்சப்படுத்துவதே ஆகும்.